24-05-2013
  முகப்பு  
  எங்களைப் பற்றி
  உள் கட்டமைப்பு
  மின்பளு வழங்கும் மையம்
  தகவல் மற்றும் பாதுகாப்பு
  மின் திட்டங்கள்
  திறந்த நுழைவுரிமை
  கொள்முதல்                            
  செயல் மற்றும் ஒழுங்குமுறைகள்
  இணையதள அடக்கம்

தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம்

தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை அரசு ஆணை எண்  114 நாள் 08.10.2008ல் வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியமானது த.நா.மி.வா. நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என மின்சாரச் சட்டம் 2003-கீழ் தவிர்க்கலாகாத தேவையின் படி அரசு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

     அரசாணை எண் 38 நாள் 21.05.2009 ல் தமிழ்நாடு மின்தொடரமைப்பு  கழகம் பதிவு செய்வதற்குண்டான (Tamil Nadu Transmission Corporation Limited) அனுமதியை தமிழக அரசு வழங்கியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (Tamil Nadu Transmission Corporation Limited) 15.06.2009 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.           

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் தமிழ்நாடு அரசுக்கு முழுவதும் சொந்தமான நிறுவனமாக 14-12-2009லிருந்து செயல்படத் துவங்கியது. அரசு ஆணை எண் 100 நாள் 19-10-2010 ல் வெளியிடப்பட்ட மாறுதல் திட்டத்தின் படி தொடர்புடைய உரிமைகளும் பொறுப்புகளும் மாநில அரசால் மாற்றப்பட்டு திரும்பவும் 01-11-2010 ல் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டது.

 

தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம்