மின்பளு வழங்கும் மையத்தின் கடமைகள்
தமிழ்நாட்டில் மின்தொகுப்பு இயங்கும்முறை நவம்பர் 1964-ல் துவங்கியது
முதல்மின்பளு வழங்கும் மையம் ஈரோட்டிலிருந்து துவங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தலைமை மின்பளு வழங்கும்மையம் 1986-ல் சென்னையிலும் மற்றும் துணை மின்பளுமையம் மதுரையிலும் அமைக்கப்பட்டது.
மின்சார சட்டம் 2003 பிரிவு-32ன்படி, பொறுப்புகளும் கடமைகளும்
தலைமை மின்பளுவழங்கும்மையம் மாநிலம் முழுவதற்கும் மின் அனுப்புதல் மற்றும் உகந்த அட்டவணையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட உரிமம் பெறவும் அல்லது மின்உற்ப்பத்தி நிறுவனம் பொருத்தமாக இயக்க பொறுப்புள்ளது.
மின்தொகுப்பு இயங்கும்முறை மேற்பார்வையிடுதல் மாநில மின்தொகுப்பில் அனுப்பப்படும் மின்சாரத்தின் அளவை கணக்கிடுதல்
மாநிலங்களுக்கிடையே மின் அனுப்புதல் முறையில் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டுடன் செயல்முறை படுத்துவது.
இத்துறை மின் கட்டமைப்பின் நிகழ்நேர செயலாக்கத்திற்கு பொறுப்பாகும் மற்றும் மாநிலத்தின் மின் அனுப்புகையை பாதுகாப்பாக மற்றும் சிக்கனமாக மாநிலத்தின் மின் கட்டமைப்பில் செயல்படுத்த, கட்டமைப்பு தரம் மற்றும் மாநிலத்தின் மின் கட்டமைப்பு குறியீடு உட்பட்டு செயல்படுகின்றது,