24-05-2013
  முகப்பு  
  எங்களைப் பற்றி
  உள் கட்டமைப்பு
  மின்பளு வழங்கும் மையம்
  தகவல் மற்றும் பாதுகாப்பு
  மின் திட்டங்கள்
  திறந்த நுழைவுரிமை
  கொள்முதல்                            
  செயல் மற்றும் ஒழுங்குமுறைகள்
  இணையதள அடக்கம்

பொருட்கள் வாஙகும் முறை 

     தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் வாங்கப்படும் பொருட்கள் ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரிகள் மூலம் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி விதிகள் 2000 ஆகியவற்றில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி வாங்கப்படுகின்றன.

 

1)         திறந்த ஒப்பந்தப்புள்ளி :- ஒப்பந்தப்புள்ளிகள் தின செய்தித்தாள்களின்  விளம்பரம் மூலம் மற்றும் த.உ.ம.ப.கழகம் அரசு இணையதளங்கள் மூலம் கோரப்படுகின்றன.

 

2)         வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி :- ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரி திறந்தமுறை ஒப்பந்தப்புள்ளி கோருவது சிக்கனமாகவோ, பலனுள்ளதாகவோ இல்லை என்று கருதினால், தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டுமே வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி முறை மூலமாக நேரடியாக ஒப்பந்தப்புள்ளி கோரலாம்.

 

3)         தனி ஒப்பந்தப்புள்ளி :-   பொருட்கள் வாங்குவது உடனடி உபயோகத்திற்கு தேவைப்படுவதாலும், வாங்கப்படும் பொருட்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் மட்டுமே வாங்கப்படும் பொருள் விற்பனைக்கு இருந்தாலோ தனி ஒப்பந்தப்புள்ளி முறை மூலம் பொருட்கள் வாங்கப்படும்.

 

     ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் ஒப்பந்தப்புள்ளி குறிப்பீட்டில் உள்ள விதிமுறைகளின்படி தங்களின் விலையினை சமர்ப்பிக்க வேண்டும்.

 

      ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் விலை சமர்ப்பிக்கும் போது குறிப்பீட்டில் உள்ளபடி முன்வைப்பு தொகையை செலுத்த வேண்டும். அல்லது முன் வைப்பு தொகை செலுத்துவதிலிருந்து விலக்கப்படுவதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். பொதுவாகவே முன் வைப்பு தொகையின் அளவு பொருட்களின் மொத்த விலையில் 1% என்ற அளவில் இருக்கும்.

 

ஒரு பகுதி முறை:- இதில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாளன்று ஒப்பந்தப்புள்ளிகாரர்களின் விலையும், மற்ற விவரங்களும் படிக்கப்படும்.

 

இரு பகுதி முறை:-இதில் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் இரண்டு மூடப்பட்ட உறைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு உறையில் பொருட்கள் விலை குறித்த விபரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும், மற்றோர் உறையில் ஒப்பந்தப்புள்ளி குறித்த இதர விவரங்கள் மற்றும் முன்வைப்பு தொகை இணைக்கப்பட வேண்டும். முன் வைப்பு தொகை தனியாகவும் சமர்ப்பிக்கலாம். ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாளன்று பொருட்களின் விலை நீங்கலாக ஒப்பந்தப்புள்ளி விபரங்கள் மட்டுமே படிக்கப்படும்.

 

      ஒப்பந்தப்புள்ளிகாரர் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விலைப்பட்டியல் குறித்த விபரங்கள் குறிப்பிட்ட பிறிதொரு நாளில் படிக்கப்படும்.

 

      ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பில் குறிப்பிட்ட நாளில் அதில் பங்கேற்க விருப்பமுடைய ஒப்பந்தப்புள்ளிக்காரரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்.

 

தனி ஒப்பந்நப்புள்ளியின் கீழ் பெறப்படும் ஒப்பந்தப்புள்ளிகள், முன்வைப்புத் தொகை செலுத்திய விவரம் மற்றும் விளக்கக் குறியீட்டின்படி உரிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த பிறகு பொருட்களின் விலை விபரங்கள் அன்றே படிக்கப்படும். விலைப்பட்டியலைத் திறந்த பிறகு மதிப்பீட்டின் அடிப்படையில் பேரில் குறைந்த விலையைக் குறிப்பிட்டுள்ள ஒப்பந்தக்காரர் இதற்கு மேற்பட்ட நடவடிக்கைக்கு தகுதியுடையவர் ஆகிறார். அவர் விலை குறைப்பு பேச்சு வார்த்தைக்கு அதற்காக உள்ள தகுந்த பேச்சுவார்த்தைக் குழுவினரால் அழைக்கப்பட்டு பொருட்களின் இறுதி விலை நிர்ணயிக்கப்படும்.

 

 

     ஒப்பந்தப்புள்ளி பரிசீலிக்கும் குழு ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் அனைத்தையும் பரிசீலித்து விவரமான மதிப்பீட்டு அறிக்கையினை ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் தனி ஒப்பந்தப்புள்ளியில், ஒப்பந்தத்தை ஏற்கத் தகுதியான ஒப்பந்தக்காரர் தேர்ந்தெடுக்கப்பட்டபின், ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரி அவருடைய ஒப்பந்தத்தை ஏற்பதற்கான ஆணை பிறக்கப்பட்டபின், தகுதியான ஒப்பந்தப்புள்ளிக்காரருக்கு கொள்முதல் ஆணை வழங்கப்படும்.

 

     இருமுறை ஒப்பந்தப்புள்ளியை ஒப்பந்தத்தை ஏற்கக் குறைந்த அளவு தகுதியான முன்வைப்புத் தொகை போன்றவை ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருந்தால் மட்டுமே, அவரது வணிகம் சார்ந்த விவரங்கள் ஒப்பந்தப்புள்ளி திறக்கும் நாளில் படிக்கப்படும் பொருட்களின் விலை விவரம் அடங்கிய உறைகள் குறிப்பிட்ட நாளில் அது திறக்கப்படும் வரையில் தகுதியான அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்படும்.

 

   ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரிகள் ஒப்பந்தப்புள்ளிக்காரர்களின் வணிக விவரங்களை ஏற்ற பின் விலைப்பட்டியலைத் திறக்கத் தகுதியான ஒப்பந்தப்புள்ளிக்காரர்களின் விவரங்களை வெளியிடுவார். குறிப்பிட்ட நாளில் மற்றும் நேரத்தில் தகுந்த அதிகாரிகளால் அவர்களின் பொருட்களின் விலை விபரம் அடங்கிய உறைகள் திறக்கப்படும். விலைப் பட்டியல் திறக்கப்பட்ட பின் குறைந்த விலை கொடுத்துள்ள ஒப்பந்தப்புள்ளிக்காரரை நிர்ணயம் செய்ய மதிப்பீடு விவரங்கள் தயார் செய்யப்படும். குறைந்த விலை ஒப்பந்தப்புள்ளிக்காரர் விலை குறைப்பு பேச்சுவார்த்தைக்குத் தகுதியான குழுவால் பேரப் பேச்சுக்காக அழைக்கப்படுவார். பொருட்களின் கொடுக்கப்பட்ட பேரம் பேசப்பட்ட விலையின் நியாயம் உறுதி செய்யப்பட்டபின் விவரமான அறிக்கை ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரி ஒப்பந்தத்தை ஏற்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டபின் ஒப்பந்தப்புள்ளிக்காரருக்கு கொள்முதல் ஆணை வழங்கப்படும்.

     
தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம்