|
மின் உற்பத்தியில் மேம்பாடு அடைய மேற்கொண்டுள்ள திட்டங்களுடன் புதிய மின் தொடர் பாதைகளையும், துணை மின் நிலையங்களையும் அமைத்தல் அவசியம்.அப்போது தான் புதிய மின் திட்டங்களினால் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் நுகர்வோருக்கு அளிக்க முடியும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள மின் அனுப்புகையின் கூட்டமைப்பு பற்றிய விவரங்கள்:
கூடுதல் உயரழுத்த மின் பாதைகளின் நீளம் 24,000 கி.மீ.
மொத்தமுள்ள துணை மின் நிலையங்கள் 830.
சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் 95 துணைமின் நிலையங்களும் ஸ்கேடா கட்டமைப்பு கூடிய சென்னை பகிர்மானம் மற்றும் நிர்வகிக்கும் மையத்துடன் (Chennai Distribution and Control Centre) இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் மாநில மின்பளு வழங்கும் மையம் (State Load Desptach Centre)ஒன்றினை சென்னையிலும் மூன்று துணை மின்பளு வழங்கும் மையங்களை சென்னை (Sub Load Despatch Centre), மதுரை, ஈரோட்டிலும் கொண்டுள்ளது.
மின் அனுப்புகையின் தற்போதைய அளவீட்டான 230 கிலோ வோல்ட்டிலிருந்து 400 கிலோ வோல்ட்டாக உயர்த்தி அதன் மூலம் மாநில எல்லைகளைத் தாண்டி தேசிய அளவில் வலுவான சீரான மின் அனுப்புகை பாதையை உருவாக்குவதே நமது இலட்சியமாகும். மேலும் மின் அனுப்புகையின் திறனை உயர்த்தி 765 கிவோ (kv) வோல்ட் அளவிலான உயரழுத்த மின் தொடர் முறையினை நிறுவி, மொத்த மின்சாரத் தொகுப்பினை ஒரு மண்டலத்திலிருந்து மறு மண்டலத்திற்கு பகிர்மானம் செய்யுமளவிற்கு சாத்திய கூறுகள் உள்ளன.
தமிழ்நாடு மின்சார வாரியம் 400 கி.வோ. துணை மின் நிலையங்கள் மற்றும் மின் தொடர்பாதைகளை நிர்மாணித்துக் கொண்டு இருக்கிறது, மேலும் சுங்குவார்சத்திரம் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் 4ஆவது 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையமாகும். இது தவிர 765 கிலோ வோல்ட் மின் தொடர் பாதையை நிறுவுவதும் ஆய்வில் உள்ளது.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளும்வகையில் எந்த வித வரையறையும் இல்லாத திறந்த வெளி பயன்பாட்டிற்கான ஒரு கருத்தினை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. எனவே மின் பகிர்மானத்தை ஊக்குவிக்கும் வகையில் தன் பயன் மின்னாக்கி மூலம் மின் உற்பத்தி செய்பவர்கள், தனியார் மின் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநிலத்திற்குள் மட்டும் திறந்த வெளி பயன்பாட்டினை உபயோகிக்கவும், மேலும் நல்ல விலைக்கு விற்கவும் தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதனால் தனியார் துறை மின் உற்பத்தியாளர்கள் முழு கொள்திறன் மின்சாரத்தையும் உற்பத்தி செய்து மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய ஏதுவாயிருப்பர் என கருதப்படுகிறது.
|